Indian Express Tamil
'சென்னை தான் எங்க அடையாளம்'; 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு: மார்க் லிஸ்டோசெல்லா அறிவிப்பு
ஜெர்மனியைச் சேர்ந்த நார்-பிரெம்ஸ் (Knorr-Bremse) நிறுவனம், சென்னையின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை பகுதியில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க 200 மில்லியன் யூரோ முதலீடு செய்கிறது. ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கான உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் இந்த ஆலை அடுத்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியின் முனிச் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நார்-பிரெம்ஸ் குழுமத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரி மார்க் லிஸ்டோசெல்லா, புதிய ஆலையின் கட்டு…