Polimer News
சீனாவின் முதல் மின்சார விமானம் மனிதர்களுடன் பறந்து சாதனை..
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில் முதல் முறையாக மனிதர்கள் பயணம் சென்ற சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான 'கோமாக்', முன்னணி பேட்டரி நிறுவனமான சி.ஏ.டி.எல் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சி.இ- 25ஏ ((CE-25A)) என்ற மின்சார விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளன. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பின்சோ நகரில் இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 16 நிமிடங்கள் வானில் பறந்து 60 கிலோ மீட்டர் தூரம் சென்று விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது.