Daily Thanthi
பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 8 மாதக் குழந்தை உட்பட 4 பேர் பலி!
பாட்னா, பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த லாரி, ஆட்டோ மீது மோதிய விபத்தில் பெண் மற்றும் 8 மாதக் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர். ஆட்டோவை வெட்டி மீட்பு சரண் மாவட்டம், கர்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹாட்பூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை 722-ல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்தது. லாரி மோதிய வேகத்தில் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்ததால், அதில் சிக்கியவர்களை மீட்க…