உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தயாரிப்பாளர் - திரையரங்க சங்கங்கள் பிரச்சனை; அமைச்சர் ராஜ்மோகன் அளித்த வாக்குறுதி!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கங்கள் மற்றும் திரையரங்க, விநியோகஸ்தர்கள் சங்கங்கள் இடையே ஓடிடி வெளியீடு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. அதாவது ஒரு படம் திரையரங்கில் வெளியானால் 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாவதை 8 வாரங்களுக்கு அதிகரிக்க வேண்டும் என திரையரங்க மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் படங்கள் திரையிடப்போவதில்லை என ஒரு அதிரடி முடிவை எடுத்தனர். இந்த முடிவை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்த்தனர். மேலும் பதிலுக்க…