Nakkheeran
நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு; கோஷ்டி பூசலால் போராட்டத்தில் குதித்த தவெகவினர்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் நகர நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், வாலாஜாபாத் பேரூராட்சி நகரப் பகுதிக்கான புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நியமனத்தில், ஆரம்பம் முதலே கட்சியில் இருந்து தொடர்ந்து பணியாற்றியவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றும், புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி, கட்சியினர் மத்திய…