Daily Thanthi
காவல் நிலையத்திற்குள் ஒப்படைக்கப்பட்ட மொபைல் போனைத் திருடி விற்ற போலீஸ் அதிகாரி கைது
திருவனந்தபுரம், கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், காவல் நிலையத்திற்குள் ஒப்படைக்கப்பட்ட மொபைல் போனைத் திருடி விற்ற மூத்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாலையில் கிடைத்த போன் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் கடந்த 8-ம் தேதி அன்று கேரள மாநிலம் திருக்கரிப்பூர் பகுதியில் சாலையில் ரூ.10,000 மதிப்புள்ள ரெட்மி மொபைல் போன் ஒன்றை கண்டெடுத்தார். இதையடுத்து அந்த போனை காசர்கோடு மாவட்டம் சந்தேரா காவல் நிலையத்தில்…