உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”வேலியே பயிரை மேய்ந்த கதை”; ஸ்டேஷனிலேயே கைவரிசை காட்டிய போலீஸ்!

காவல் நிலையத்தில் (போலீஸ் ஸ்டேஷன்) ஒப்படைக்கப்பட்ட மொபைல் போனைத் திருடி விற்ற வழக்கில், மூத்த காவல்துறை அதிகாரி (போலீஸ்) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சந்தேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சாலையில் கண்டெடுத்த ரூ.10,000 மதிப்புள்ள ரெட்மி மொபைல் போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது, பணியிலிருந்த மூத்த காவல்துறை அதிகாரி பைஜு (41), அந்த மொபைல் போனைப் பெற்றுக்கொண்டு, காவல் நிலையப் பொது டைரியில் முறைப்படி பதிவு செய்து, மேஜை டிராயரில் வைத்துள்ளார். பின்பு, அந்த போன் காணாமல் போனது. இதனிடைய…