உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘டேர் டெவில்’ படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? - வெளியான பட்டியல்

‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம் ‘டேர் டெவில்’. இப்படத்தை ‘பிரேவ் ஹார்ட்ஸ்’ புரொடக்‌ஷன் எனும் பேனரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஸ்ரீலீலா, மோகன்லால், ஸ்வாசிகா உள்ளிட்ட பலரது பெயர் அடிபட்டது. பின்பு அவர்களுக்கு பதில் கயாடு லோகர், வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்…