Nakkheeran
“தொடர் வேலைநிறுத்தம்” - நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு!
நியாயவிலைக்கடை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி நவ.2,3,4 தேதிகளில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா சிதம்பரத்தில் புதன்கிழமை அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழகத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் நியாய விலைக்கடை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்குதல் பலதுறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்…