Daily Thanthi
சென்னை: சித்தியின் வீட்டிலேயே கைவரிசை காட்டிய பெண் - 19 சவரன் அபேஸ்!
சென்னை, சென்னை கொடுங்கையூரில் சித்தியின் வீட்டிலேயே மகள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொடுங்கையூர் ஆர்.வி. நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. அவருடைய அக்கா ஸ்ரீதேவி கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்ரீதேவியின் மகள் பெமினா தனது சித்தி சுந்தரியுடன் வசித்து வந்தார். பெமினா வழக்கறிஞராக இருந்து வருகிறார். இந்த நிலையில், சுந்தரி வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு நகைகள் திருடு போயுள்ளன. இது குறித்து…