உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு : தமிழக அரசு உத்தரவு!

கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் முல்லை மற்றும் பெரியாறு ஆறுகள் இணையும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானம் 1887ஆம் ஆண்டு தொடங்கி 1895ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இதற்கான கட்டுமானத்தின் போது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பிரிட்டிஷ் அரசு நிதியை நிறுத்தியபோது, பென்னி குவிக் இங்கிலாந்திலிருந்த தனது சொத்துக்களை விற்று இந்த அணையைக் கட்டி முடித்தார். மேற்கு நோக்கி அரபிக்கடலில் வீணாகக் கலந்த பெரியாறு நதியின் நீரை, சுரங்கப்பாதை வழியாகக் கிழக்கு நோக்கித் திருப்பி வைகை ஆற்றுடன் இணைத்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை…