Hindu Tamil Thisai
தீபாவளிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை
சென்னை: தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.9) விடுமுறை வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், நவ.9-ம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத்துறை செயலர் இ.சுந்தரவல்லி வெளியிட்ட அறிவிப்பில், ‘மாணவர்கள், பெற்றோர்…