IBC Tamil
ஸ்பெயின் தொடருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
ஸ்பெயினின் டொலிடோ பகுதியில் இரு அதிவேக தொடருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்ரிட்டிலிருந்து செவில்லே நோக்கி ஒரே திசையில் பயணித்த தொடருந்துகளில், பாதையில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்தின் பின்பகுதியில் மற்றொரு தொடருந்து அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. தீய...