தனியார் பஸ் உரிமையாளர் அடித்துக் கொ*லை; தடுக்கச் சென்ற மகள் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம்(80). ஆம்னி பஸ் ஓனரான இவர், சென்னையில் வசித்து வருகிறார். இன்று ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வேந்தன்பட்டி வந்தார். திருமணம் முடிந்து வேந்தன்பட்டியில் அவரது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த விஜயபுரம் சீனிவாசன்(55), கே.கே.ஆர் வீதி விஜய் (35) உள்ளிட்ட சிலர் ஏற்கெனவே இரு தரப்பினரிடையே பிரச்சனையில் உள்ள கோயில் திருமண மண்டபம் குறித்து பேசியுள்ளனர். இதில் இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சிதம்பரத்தை கட்டையால் தாக்கி உள்ளனர். இதனைப் பார்த்த சிதம்பரம் மகள் அதே ஊரைச் சேர்ந்த இந்துமதி (52) தடுக்க முயன்ற போது அவரையும…