உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வாடிய வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக்குலுங்கச் செய்யும் சித்தர் கோயில்; தென்காசி அருகே அற்புதத் தலம்!

தென் தமிழகத்தில், பழநிக்கு இணையான தலம் தென்காசிக்கு அருகே உள்ள திருமலைக்கோயில். இங்குள்ள திருக்கோயிலில் திருப்பணி செய்து வந்தவர்கள் சொக்கம்பட்டி வடகரை ஜமீனைச் சேர்ந்தவர்கள். தம் செல்வங்களை எல்லாம் கோயில் திருப்பணிகளுக்கும் பொது சேவைகளுக்கும் வாரி வாரி வழங்கியவர்கள் சொக்கம்பட்டி வடகரை ஜமீன் வம்சத்தினர். அவர்கள் திருமலைக்கோயிலும் பழநியைப்போலவே புகழ்பெற்றுத் திகழவேண்டும், பழநியில் உள்ளதைப்போலவே திருமலைக் கோயிலிலும் தமிழ்க் கல்வி நிலையம்…