Nakkheeran
எம்.எல்.சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி; கிண்டல் செய்த பிரதமர் மோடி!
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார் மற்றும் கர்நாடகத்தில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 28 இடங்களுக்கான சட்ட மேலவைத் தேர்தல் அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று (28-10-26) அறிவிக்கப்பட்டன. வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இந்தத் தேர்தல் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 12 இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் பின்னடைவைச் சந்தித்தது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வி அடைந்துள்ளது. கர்நாடகாவில் 4 தொகுதிகளில…