IBC Tamil
உகண்டாவில் திரைப்பட பாணியில் 38 கொலைகள்: 15 ஆண்டுகளாக மனித உடல்களை உண்ட சீரியல் கில்லர் கைது
கிழக்க ஆபிரிக்க நாடான உகண்டாவில் 15 ஆண்டுகளில் 38 பேரை கொலை செய்து அவர்களின் உடல்களை சமைத்து சாப்பிட்ட நபரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முஜுரிசி மோசஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலகட்டத்தில், மசாகா, இபண்டா மற்றும் காசோ ஆகிய பல்வேறு பகுதிகளில் இந்தக் கொலைக் குற்றங்களை செய்துள்ளார். பெண்களை ஏமாற்றியும், ஆசை வார்த்தைகளைக் கூறி வரவழைத்தும் ...