Hindu Tamil Thisai
ராணிப்பேட்டை அருகே மாயமான ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்களுக்கு பிறகு மீட்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்கள் கழித்து ஆந்திராவில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (46). இவரது மனைவி பிரேமா (33). இவர்கள், சாலையோரங்களில் பாட்டில்களை சேகரித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மகேஸ்வரி (1) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த செப்…