Indian Express Tamil
தீபாவளி சிறப்பு ரயில்கள் முழு லிஸ்ட்: திருவனந்தபுரம், மதுரை, கோவை, தஞ்சாவூர், நாகர்கோவிலுக்கு எந்த தேதிகளில் பயணம் செய்யலாம்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சென்னைத் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும்(கோயம்புத்தூர்) சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 29, 2026 அன்று காலை 08:00 மணிக்குத் தொடங்குகிறது. 1. தாம்பரம் – நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் (06153 / 06154) ரயில் எண் 06153 (தாம்பரம் - நாகர்கோவில்): புறப்படும் நேரம்: நவம்பர் 06, 2026 (வெள்ளிக்கிழமை) இரவு 11:55 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 03:30 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும். முக்கிய நிறுத்தங்கள்: செங…