IBC Tamil
வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சலுகைகள் : அநுரவின் முக்கிய அறிவிப்பு
நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி, குறித்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப...