பிள்ளையானுக்குப் பிணை கோரிக்கை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் அன்றைய தினம் இந்தப் பிணைக் கோரிக்கை தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு அறிவித்து சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதியரசர்கள் குழாம்...