Indian Express Tamil
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் கடையில் 2 கிலோ கோதுமை மாவு பாக்கெட்; விலை இவ்ளோவா? தமிழக அரசு பரிசீலனை
தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கோதுமை மாவை பாக்கெட்டுகளில் வழங்கிட தமிழக அரசு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கோதுமை மாவு வெறும் ரூ.15 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதிலாக கோதுமையைப் பெற்றுக்கொள்ளவும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் உள்ள அட்டைதாரர…