Nakkheeran
”இக்கட்டான சூழலில் பிறந்த 931 குழந்தைகள்”; 'அர்னாப்’ எனப் பெயரிட்ட பெற்றோர்கள்
வங்கக்கடலில் தீவிரமடைந்த அர்னாப் புயல், நேற்று (28-10-26) ஒடிசா மற்றும் ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் கரையைக்கடந்தது. இதன் காரணமாக, கரையோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கன மழை கொட்டி தீர்த்தது. இந்த புயல் வீசும் சமயத்தில், கனமழை பெய்துகொண்டிருந்த இக்கட்டான சூழலில், ஒடிசாவில் மொத்தம் 931 குழந்தைகள் பாதுகாப்பாகப் பிறந்துள்ளன. பிறந்த குழந்தைகளுக்கு, இந்த புயலை நினைவு கூறும்விதமாக பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதன்படி, ஆண் குழந்தைகளுக்குப் புயலின் பெயரான ‘அர்னாப்’ மற்றும் ‘தூபான்’ என்றும், பெண் குழந்தைகளுக்கு ‘வர்ஷா’ மற்றும் ‘பதாசி’ என்றும் பெற்றோர் பெயரிட்டுள்ளனர். இந்த புயலின் தீவிரத்தை உணர்ந்த ஆ…