IBC Tamil
காணாமல் போன முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் : தொடரும் தேடுதல் நடவடிக்கை
முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கை இன்றும் (29) தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் சர்வதேச ரீதியிலான தகவல் பரிமாற்றம் மற்றும் தேடுதல் உதவிகளைப் பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன. கடந்த 26ஆம் திகதி காலை ‘MLT/1742’ என்ற இலக்கமுடைய படகில் தூண்டில் தொழிலுக்காக...