Dinamani
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!
வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான ஒர்னாப் புயல் ஆந்திர மாநிலம் நர்சாபூர் - காக்கிநாடா இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே அதி தீவிர புயலாக புதன்கிழமை கரையைக் கடந்தது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சி, இன்று காலை காற்றழுத்த…