உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி நெருங்கும் வேளையில் 3 நாள் ரேஷன் ஊழியர் தொடர் போராட்டம்: பொதுமக்களுக்கு உணவுப் பொருள் விநியோகம் பாதிக்குமா?

தீபாவளி நெருங்கும் வேளையில், பொதுமக்கள் ரேஷன் கடையில் அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு வரும் நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு உணவுப் பொருள் விநியோகம் பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகிக்க 35,000-க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் செயல்படுகின்றன. இந்த ரேஷன் கடைகள் மூலம் சுமார் 2 கோடிக்கு மேலான குடும்ப அட்டைதாரர்கள் உண…