உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” - ராஜினாமா விவகாரம் குறித்து எல்.முருகன் விளாசல்!

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சராக பதவி வகித்து வந்த எல்.முருகன் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி திடீரென தனது மத்திய அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். 2029ஆம் மக்களவைத் தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தவும், தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்ப்பதற்கும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். 2030 வரை எம்.பி பதவிக் காலம் இருக்கும் நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. மாநிலங்களவை எம்.பி பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேசத்தில் அந்த இடம் காலியானது…