IBC Tamil
ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கையர் : குற்றமற்றவர் என விடுவித்த மாலைதீவு நீதிமன்றம்!
மாலைதீவில் 02 கிலோ கிராமிற்கும் அதிகமான தங்கத்தைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரு வருடச் சிறைத்தண்டனையை முழுமையாக அனுபவித்து முடித்த இலங்கைப் பிரஜை ஒருவரை மாலைதீவு உயர் நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவியல் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து சிறைத்தண்டனை விதித்த அதே திகதியில், அதாவது சரியாக ஓராண்டு கழித்து, நேற்று (28) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகத...