உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“மக்களின் தேவையறிந்து செயல்பட வேண்டும்” - அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29-10-26) காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அரசின் நிலத் திட்டங்கள், நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் முதல்வர் விஜய் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மக்களின் தேவையறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்…