Polimer News
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் ஜான் பாண்டியனிடம் 5 மணி நேரம் விசாரணை..!
தொழிலதிபர் 'ஜெம்' கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். சிறுமிகளை அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்ட வீட்டை பராமரித்து வந்த சாந்தி உடன் இருந்த தொடர்பு குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மேலும் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாருடன் உள்ள தொடர்பு மற்றும் வீரமணி இடம் நடத்தப்பட்ட பண பரிவர்த்தனையில் கட்டப்பஞ்சாயத்து செய்தாரா என்ற கோணத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. சிறுமிகள் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டது முன்பே தெரியுமா? பணத்திற்காக மறைத்தீர்களா? என்றும் ஜான் பாண்டியனிடம் துருவித…