Nakkheeran
”மீண்டும் உயரும் எம்.எல்.ஏ, அமைச்சர்களின் சம்பளம்”; எவ்வளவு என்று தெரியுமா?
அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ (சட்டமன்ற உறுப்பினர்) க்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு, அமைச்சரவை நேற்று (28-10-26) ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முன்மொழிவு பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் சன்னி ஜோசப் கூறி இருந்தார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கேரளத்தில் தற்போது, எம்.எல்.ஏக்களுக்கு ரூ.70 ஆயிரமும், அமைச்சர்களுக்கு ரூ.1.08 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரையிலான ரயில் பயண…