உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம்: செங்குறிச்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட மக்கள் முடிவு

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த அக்கிராம மக்கள், அங்கு மதுபானக்கடை அமைப்பதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துவாக்குடியில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்குச் செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகச் சென்று கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில், செங்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுபானக்கடை அமையவிருக்கும் சாலையைக் கடந்துதான் பள்ளிச் சிறு…