Nakkheeran
பரபரப்பை கிளப்பிய அன்பில் வழக்கு - நீதிமன்றத்தில் முத்துக்குமார் சரண்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் மோசடி நடந்ததாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சரணடைந்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மோசடி செய்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஜூன் 27இல் வழக்குப்பதிவு செய்தது. வழக்கில் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட திமுக நிர்வாகியும், தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவருமான பி.டி. அரசகுமாரை அன்றைய தினமே சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஜூலை 11ஆம் தேதி, சென்னை காவல் ஆணையர்…