உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“6 மாத தவெக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன” - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (29-10-26) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு சுமார் 6 மாத காலம் ஆகின்றன. இந்த காலத்தில் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. ஒரு நிலையற்ற ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதை இந்த அரசு சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறி தட்டி கழிக்கிறார்களே தவிர இந்த மின்வெட்டைச் சரி செய்வதற்கு ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக…