Indian Express Tamil
குக்கர் மூடியில் எண்ணெய் பிசுக்கா? வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்... பளபளன்னு மாறிடும்
கிச்சனில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சமையல் பாத்திரங்களில் பிரஷர் குக்கர் முக்கியமானது. சாதம், பருப்பு, சாம்பார், காய்கறிகள் எனப் பலவிதமான உணவுகளை விரைவாகச் சமைக்க இது உதவுகிறது. தினமும் பயன்படுத்துவதால் குக்கரின் உட்புறம் மட்டுமின்றி, அதன் மூடியிலும் எண்ணெய் பிசுக்கு, உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகள் படியத் தொடங்குகின்றன. குறிப்பாக, மூடியின் ஓரங்கள் மற்றும் ரப்பர் கேஸ்கெட் பொருத்தப்படும் பகுதிகளில் படியும் பிசுபிசுப்பான அழுக்குகளைச் சாதாரணமாகத் தண்ணீரில் கழுவுவதன் மூலம் முழுமையாக நீக்குவது கடினமாக இருக்கலாம். இவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்யாமல் விட்டால், நாளடைவில் அழுக்கு கெட்டியாகி, அகற்…