Nakkheeran
“எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை” - ரெய்டுக்குப் பிறகு கே.என்.நேரு பரபரப்பு!
கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சூழலில், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லம் மற்றும் அவருடைய அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (29-10-26) காலை முதல் சோதனை நடத்தினர். அதே போல், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்கள்…