உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'நட்டத்தில் அமெரிக்கா... கஷ்டத்தில் டிரம்ப்-கஜானா காலியாகியும் முடியாத போர்

உலகையே அதிரவைக்கும் வல்லரசு நாடான அமெரிக்கா, இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட போர், மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது. ஆனால், அந்தப் போர் தற்போது அமெரிக்காவின் தலையிலேயே மிகப்பெரிய நிதிச்சுமையாக மாறி விடிந்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சி மதிப்பீட்டின்படி, இந்த ஈரான் போருக்காக அமெரிக்கா இதுவரை செலவிட்டுள்ள தொகை மட்டுமே 47 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இதனை இந்திய மதிப்பில் கணக்கிட…