Polimer News
வங்கக்கடலில் மீண்டும் புயல் உருவாகுமா?
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய சூழலில் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேட்டியளித்த அம்மையத்தின் இயக்குனர் துரை, வங்கக் கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருப்பதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோர பகுதிகளை சென்றடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், எல்நினோ காலம் என்பதாலும், வங்கக்கடலின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த ஆண்டு அடுத்தடுத்து குறைந்த காற்று தாழ்வு பகுதிகள் உருவாக வ…