Indian Express Tamil
17 கைதிகள் தப்பிய சம்பவம்: சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ் அதிரடி மாற்றம்; சிறைத் துறைக்கு புதிய டி.ஜி.பி நியமனம்
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தின் எதிரொலியாக, சிறை மற்றும் சீர்திருத்தச் பணிகள் துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கூடுதல் டி.ஜி.பி கே. சங்கர் சிறைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சய் மதுர் உள்ளிட்ட மேலும் பல மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனியில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தின் எதிரொலியாக, சிறைத் துறை டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் காவல் துறையைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிக…