உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தென்காசி எஸ்.பி- யாக ஸ்டாலின் ஐ.பி.எஸ் நியமனம்: கனிமக் கொள்ளையர்களுக்கு மீண்டும் சிம்ம சொப்பனம்

தமிழகத்தின் துடிப்பான ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவர் ஸ்டாலின். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யாக பணிபுரிந்த இவர் அங்கு மணல் கடத்தல், எம் சாண்ட்- ஜல்லி கற்கள் கடத்தும் கும்பலுக்கு சவாலாக விளங்கினார். குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனுமதி பெறாத குவாரிகளில் இருந்து முறை கேடாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட கனிம வளங்களை பெருமளவில் தடுத்து நிறுத்தினார். இதனால் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி கட்டுக்குள் வந்தது. விபத்துகளும் குறைக்கப்பட்டன. விழிப்புணர்வு அதிகமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கலெக்டர் அல்லது எஸ்.பி சிறப்பாக பணிபுரிந்து பொதுமக்களிடம…