Indian Express Tamil
நான் இல்லாவிட்டாலும் திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க-வினர் தீவிரமாக வேலை செய்வார்கள்: கே.என்.நேரு
தி.மு.க முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் இல்லங்களில் இன்று காலை முதல் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தது. இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் குறிப்பிட்ட கே.என்.நேரு, மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைத் திசைதிருப்பவே என் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன் மணிவண்ணன் ஆகியோர் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 7 மணி முதல…