Hindu Tamil Thisai
பண்ணவாடிக்கு செங்கால் நாரை பறவை வருகை: 2018-க்குப் பிறகு 2-வது முறை!
சேலம்: மேட்டூர் அருகே பண்ணவாடிக்கு, 2018-ம் ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக அரிய வகை வலசைப் பறவையான செங்கால் நாரை வந்துள்ளது. பண்ணவாடிக்கு அரிய வகை வலசைப் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இவற்றைப் பதிவு செய்வதற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவை ஆர்வலர்கள் வருகின்றனர். இந்நிலையில், செங்கால் நாரையின் வருகையைப் பறவை ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சிறகுகள் மற்றும் இயற்கை ஆராய்ச்சி கழகத்தினர் கூறியதாவது…