உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அறிவிக்கப்படாத இடைத்தேர்தலுக்கு தன்னை வேட்பாளராக அறிவித்த சீமான்..!

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா செய்ததால் காலியான அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேட்டி அளித்த அவர், சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பதே தனது தற்போதைய இலக்கு என்று கூறினார். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அரசியல் குறித்த புரிதல் இருக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்