Nakkheeran
”இஸ்ரேல் தேர்தலில் வாக்குக்குப் பணம்?”; சந்தேகம் கிளப்பும் பிரதமர் நெதன்யாகு
உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, இந்த தேர்தலில் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், எந்த கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 27 அன்று இஸ்ரேலின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (28-10-26) முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட 3 -ல் 2 பங்குக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சியின் தலைமையிலான கூட்டணி என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது, ம…