Indian Express Tamil
தீபாவளி பலகாரம் செய்யும் முன் ஒரு சின்ன வேலை... கிச்சனில் இந்த இடங்களைச் சுத்தம் பண்ணுங்க
தீபாவளி பண்டிகை என்றாலே வீட்டைச் சுத்தம் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது, பலகாரங்கள் தயாரிப்பது எனப் பல வேலைகள் அணிவகுக்கும். குறிப்பாக, முறுக்கு, அதிரசம், லட்டு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கப்படும் சமையலறையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியம். பொதுவாக, சமையலறை மேடை, தரை, பாத்திரங்கள் ஆகியவற்றை மட்டுமே சுத்தம் செய்யும் பலரும், எண்ணெய்ப் பிசுக்கு, தூசி மற்றும் உணவுத் துகள்கள் அதிகம் படியும் சில முக்கியமான இடங்களை மறந்துவிடுகின்றனர். இந்த தீபாவளி 2026க்கு முன்பாக, உங்கள் சமையலறையைப் பளபளப்பாக மாற்றவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கவனிக்க வேண்டிய 7 முக்கிய இடங…