Indian Express Tamil
யோவ் மாமா, இங்க வாயா... ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகரை கிண்டல் செய்த லட்சுமி: அந்த நடிகர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நடிகை லட்சுமி, ஒரு நடிகரை மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மாமா என்று அழைப்பதும், அவருடன் விளையாட்டாக சண்டைபோடுவதும், அதன்பிறகு சண்டை பெரிதாக இருவரும் பேசாமல் இருப்பதும் என பல செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். பழம்பெரும் நடிகை குமாரி ருக்மணி மகள் லட்சுமி. 1968-ம் ஆண்டு ஜீவனாம்சம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், எம்.ஜி.ஆருடன் மாட்டுக்கார வேலன், படத்தில் நடித்துள்ளார். மேலும் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள லட்சுமி,தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்…