BBC Tamil
காஷ்மீரில் 1 வயது குழந்தையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு மாரத்தான் ஓடிய தாய் - விமர்சனங்களுக்கு அளித்த பதில்
34 வயது குல்சூம் பானோ, குழந்தையை நெஞ்சில் கட்டிக்கொண்டு அரை மாரத்தானில் பங்கேற்றார். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில், தனது குழந்தையை உடலோடு கட்டிக்கொண்டு ஒரு பெண் ஓடத் தொடங்கியது, பலரது கவனத்தை ஈர்த்தது.