Indian Express Tamil
சென்னை விமான நிலைய நிர்வாகம்: விஜய் கோரிக்கையை ஏற்கும் மத்திய அரசு; இந்த ஒரு விஷயத்துக்காக காத்திருப்பு
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடு, நிர்வாகம் மற்றும் எதிர்கால வளர்ச்சிப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கோரிக்கை குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) கருத்துக்காக மத்திய அரசு காத்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்துள்ள பதிலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமி…