Indian Express Tamil
விஜயுடன் தொடர்புபடுத்தி உதயநிதி அறிக்கை: சென்னையில் கைதான பி.எல்.எம் பிரேம்குமார் யார்?
தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், "5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த பி.எல்.எம் (BLM) பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் டம்மி சி.எம்-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட…