Indian Express Tamil
எனக்கு ரசிகர் மன்றம் இல்லை; சமூக வலைதளத்தில் என் அதிகாரப்பூர்வ கணக்கு இதுதான்: ஜேசன் சஞ்சய் அறிக்கை
தமிழக முதல்வர் விஜயின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய், நான் எந்த ஒரு ரசிகர் மன்றமும் தொடங்கவில்லை என்றும், எனது ரசிகர் மன்றம் என கூறும் பக்கங்கள் போலியானவை. போலி கணக்குகளில் இருந்து வரும் பதிவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல என்றும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், நடிப்பில் இருந்து விலகி, அரசியல் கட்சி தொடங்கி முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த சிக்மா படத்தில், சந்தீப் கிஷான் நாயகனாக நடித்திருந்தார். அக்டோபர்…